Campaign at Kallakurichi

[Not a valid template]

5/8/2015 அன்று கள்ளக்குறிச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் SDPGA மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

SDPGA ஒருங்கிணைப்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் தங்களது நிறைவேற்றப்படாத நீண்டகால கோரிக்கைகளை துணிவுடன் தாமாக முன் வந்து தெரிவித்தனர்.

பல மாதங்களாக,ஊதியம் கிடைக்காமை,பணப் பயன்கள் பெறாமை,பணிப் பதிவேடு தொடங்காமை,விடுப்புக் கால ஊதியம் தராமை என மருத்துவர்கள், ஊழியர்கள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக சிக்கல் களுக்கு ஆளாகி துன்பப்பட்டு வந்தனர்.

மேற்கண்ட “ஆமை” களுக்கு காரணமாக அலுவலகத்தில் செயல்படா “ஆமை” ஒன்று உள்ளது என விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடன் 15 நாட்களுக்குள் நிறைவேற்றித் தருமாறு தலைமை மருத்துவரிடம் நமது SDPGA மூலம் எழுத்து பூர்வமாக கோரிக்கை தரப்பட்டது.

கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம்.

கூட்டத்தில் SDPGA மாநில செயலாளர் மருத்துவர் பி.சாமிநாதன், SDPGA மாவட்ட தலைவர் மரு.மா.அன்புமணி, மாவட்ட செயலாளர் மரு.அருண்சுந்தர், மாவட்ட துணை தலைவர் மரு.க.பழமலை, மாவட்ட துணை செயலாளர் கள் மரு.இரா.நடேசன்,மரு.கண்ணன் கலந்து கொண்டனர்.

நிகழ்சசியை மருத்துவர்கள் கண்ணன், முத்துக்குமார், பழமலை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேற்கண்ட நிகழ்வானது மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களிடையே நம்பிக்கையும், எழுச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.