Demanding the Implementation of Old Pension System

இன்று 22/9/2016, எமது சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஆய்வுக்குழுவிடம் எமது கோரிக்கைகளைத் தெரிவித்தோம்.

mediaதமிழக அரசு மருத்துவர்களில் சுமார் 10,000 மருத்துவர்கள் 2003 ஆம் ஆண்டுக்குப் பின் அரசுப்பணிக்கு வந்தவர்கள். இவர்கள் அரசு மருத்துவர்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகம் ஆவர். இவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது. இவர்கள் புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர். அரசு மருத்துவர்களில்  சரிபாதிக்கும் மேல்  புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிப்பு அடைகின்றனர்.

பொதுமக்கள் உயிர் காக்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு அரசு ஓய்வூதியம் என்பது மிக மிக முக்கியமான ஒரு தேவை ஆகும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்திட வலியுறுத்தி எமது சங்கம் சார்பாக 19-02-2016 அன்று ஒரு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் நடத்தி மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்தோம்.

இன்று ,சென்னை தலைமைச் செயலகத்தில் ஓய்வூதிய ஆய்வுக் குழுவிடம்  பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என  வலியுறுத்தியுள்ளோம்.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன்,மாநிலச் செயலாளர் மருத்துவர் சாமிநாதன்,மாநில அமைப்புச் செயலாளர் இராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

On 22/9/2016 SDPGA met the expert committee in response to their invitation to express our association views on the demand to continue the old pension scheme.

media2We presented the following facts very clearly:

  1. Tamilnadu is a pioneer in health sector which has been proudly endorsed by our Honorable Chief Minister in the recent assembly session saying “TN should be compared to developed countries not with the other states of India”
  2. Such a high standard is reached only through sustained efforts of the medical professionals for the past several decades.
  3. Govt doctors have been able to do this in spite of less salary and allowance comparing to other states and central govt drs. The only security for them so far is family pension.
  4. Now around 50% of the govt drs don’t have this benefit. They are under new pension scheme which is contributed by the individuals and the money is deposited in unreliable private fund managements.
  5. Because of this many young doctors do not take up the govt service and many doctors are quitting the service. Alarmingly more posts are becoming vacant.
  6. If this situation continue there will be a dearth of specialists in govt side to offer quality health care service to the public especially rural population. Also we will not be having enough man power to handle the epidemics and natural disasters in future.
  7. Ultimately the public health system will crumble.

SDPGA represented the committee to continue the old pension scheme for all the govt doctors to retain them in service and to save the public health system.