SDPGA met Tamilnadu CM

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் – SDPGA மாநிலச் செய்தி வெளியீடு

  1. மருத்துவ முதுநிலை MD, MS படிப்பில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 50% இட ஒதுக்கீடு வேண்டும். அதற்காக அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
  2. நீட் UG, PG தேர்வுகளில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.
  3. சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளான DM, MCh ஆகியவற்றில் தமிழகத்தின் அனைத்து இடங்களும் அனைத்திந்திய போட்டிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வருங்காலத்தில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்படும்.எனவே DM, MCh இடங்களைக் காப்பாற்ற அவசர சட்டம் இயற்ற வேண்டும்.
  4. தனியார் மருத்துவக் கல்லூரி களில் 50% அரசு சார்பு இடங்களை அரசே நிரப்ப வேண்டும். அவ்விடங்களில் சேர்கின்ற மாணவர்களுக்கு நியாயமான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர். லட்சுமி நரசிம்மன் கோரிக்கை மனு அளித்தார்.

இடம் : சேலம்
நாள் : 28/04/17