மார்ச் 26
பொதுக்குழு கூடுகிறது .
SDPGA வின் மாநிலப் பொதுக்குழு கூடுகிறது.
ஏற்கனவே நீ கேள்விப் பட்டிருப்பாய் என நம்புகிறேன் நண்பா!
அரசு மருத்துவர்களின் ஆற்றல் மிகு படை யாம் SDPGA ,
வாய்ச்சொல் வீரனல்ல.
வம்புக்கு போகிறவனுமல்ல.
களத்திலே நின்று கண்ணை இமை காப்பது போல அரசு மருத்துவர்களின் நலன் காக்க நாளும் உழைத்திடும் நல்லதோர் தலைமையின் கீழ் புறப்பட்டு வந்த புதுமை மருத்துவர்கள் அணி அது.
பொதுநலம் , மாநில மருத்துவர் பணிநலம் விழைந்திடும் வித்தகர் செயலர் நடத்திடும் சங்கம் இது.
பத்தாண்டுகள் நாம் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என அரசு மருத்துவர்களின் அறிவுக் கண்ணை திறந்து காட்டிய சங்கம் SDPGA.
தமிழக அரசின் பிற துறை சார்ந்த ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை 6 வது ஊதியக் குழுவில் 2006 இலேயே பெற்று விட்டனர். நம்மோடு பணி புரியும் செவிலியர் உட்பட அனைவரும் பெற்று விட்டனர். இப்போது அவர்கள் போராடுவது குரல் கொடுப்பது கோரிக்கை எழுப்புவது எல்லாமே மத்திய அரசுக்கு இணையான படிகளை வழங்கக் கோரிதான்.
நாம் இன்று கேட்பது மத்திய்அரசு மருத்துவர் களுக்கு இணையான காலமுறை ஊதியம் .
ஆம் நண்பர்களே!
4, 9, 13 ஆம் ஆண்டுகளில் மத்திய்அரசு மருத்துவர்கள் போல எங்களுக்கும் கொடு எனக் கேட்கிறோம்.
இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் SDPGA இதற்காக களப்பணி ஆற்றிவருகிறது .
இந்த
“ஊதியப்பட்டை-4, 13 ஆண்டுகளில்”
என்ற கொள்கைப் பயிருக்கு துரோகம் எனும் களைகளால் தீமை வராமல் ,
சந்தர்ப்பவாதிகள் எனும் பூச்சிகளால் தீங்கு வராமல்,
எதிரிகளாய் மேயவரும் ஆடுமாடுகளால் அழிவு வராமல் உழவன் நிலையில் இருந்து
நமது கொள்கைப் பயிருக்கு நீர்ப்பாய்ச்சி , உரமிட்டு ,நெடுவயல் காத்து அறுவடை செய்ய வேண்டிய பொறுப்பு உனக்கு உள்ளது நண்பா!
அப்படி பொறுப்பு எடுத்துக் கொண்ட காரணத்தால் தான் மார்ச் 26 இல் பொதுக்குழு கூட்டுகிறோம் நண்பா!
துள்ளி வரும் வேலே!
ஆவேசத்தை அள்ளி வரும் வாளே!
நம் நெஞ்சில் சங்க உணர்விருக்க ,
அரசு மருத்துவர்களின் ஆற்றல் மிகு படைக்கலனாம் SDPGA வின் கொள்கைப் பயிருக்கு குறையொன்றுமில்லை.
தோளை உயர்த்து !
சுடர்முகம் தூக்கு!!
பொதுக்குழு கூட்டம் வெற்றிபெற மறக்காமல்வந்துவிடு
மாநகர் சென்னைக்கு.!
அரசு மருத்துவர்கள் & பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்
SDPGA